இலவச இ–சேவை மைய சிறப்பு முகாம்
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் த.வெ.க., சார்பில், இலவச இ–சேவை சிறப்பு முகாம் நடந்தது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., கனிமொழி சார்பில், தமிழக வெற்றி கழகத்தின் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம், நரசிம்மநாயக்கன்பாளையம் சார்பில் மாதந்தோறும் ஒவ்வொரு பகுதிகளிலும், இலவச இ-சேவை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 6வது வார்டு பாலாஜி நகர் கோயில் மைதானத்தில் இலவச இ–சேவை சிறப்பு முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் நித்தின் துவக்கி வைத்தார். முகாமில் சாதி சான்றிதழ், இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, ஆதரவற்ற பெண், வேளாண் வருமானம், குடும்ப இடமாற்றம், வேலையின்மை, விதவை சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் அனுப்பப்பட்டன. இதில் பாலாஜி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு குடியிருப்புகளில் இருந்து வந்த பொதுமக்கள் பயன் பெற்றனர். தொடர்ந்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும், இலவச இ-சேவை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.