உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை அரசு கலை கல்லுாரியில்  இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி துவக்கம் 

கோவை அரசு கலை கல்லுாரியில்  இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி துவக்கம் 

கோவை; கோவை அரசு கலை கல்லுாரியில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்புகள் துவக்கவிழா, நேற்று கல்லுாரி அரங்கில் நடந்தது. கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலட்சுமி துவக்கிவைத்தார். இதில், அவர் பேசுகையில், '' கடின உழைப்புடன் முயற்சி செய்தால், போட்டித்தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறமுடியும். செய்திதாள்களை தினந்தோறும் படிப்பது மிகவும் அவசியம்,'' என்றார். இதில், மத்திய, மாநில அரசு தரப்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள், அவை எதிர்கொள்ளும் பொதுவான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முதலாமாண்டு படிக்கும், 250 மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் எழிலி, அரசியல் அறிவியல் துறைத்தலைவர் கனகராஜ், தமிழ்த்துறை தலைவர் பூங்கொடி, விலங்கியல் துறைத்தலைவர் ஷீலா பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !