உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவில் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் 

கோவில் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் 

பொள்ளாச்சி ; கோவை மாவட்ட ஹிந்துசமய அறநிலையத்துறை, மிராக்கிள் இன்டகரேடட் ெஹல்த் சென்டர், கஞ்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொள்ளாச்சி இந்திய மருத்துவ சங்கம், மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி விரிவாக்க சேவை துறை, சக்தி புரா சார்பில், கோவில் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம், கல்லுாரி வளாகத்தில் நடந்தது.என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன் வரவேற்றார். முகாமை கோவை இணை ஆணையர் ரமேஷ், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப், பொள்ளாச்சி இந்திய மருத்துவ சங்க செயலாளர் சவுந்தராஜன் ஆகியோர் பேசினர்.முகாமில், மிராக்கிள் இண்டர்க்ரேடட் ெஹல்த் சென்டர் முதுநிலை டாக்டர் தங்கவேலு, இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் டாக்டர் சக்திவேல், முன்னாள் தலைவர் திருமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில், டாக்ர்டகள், செவிலியர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். ெஹல்த் சென்டர் மேலாளர் ரமேஷ்குமார், பூபதி இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். முகாமில், 230 கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ