உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் இலவச பஸ்கள் மீண்டும் இயக்கம்

மகளிர் இலவச பஸ்கள் மீண்டும் இயக்கம்

கோவை : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, சரவணம்பட்டி - துடியலுார் மார்க்கத்தில் பெண்களுக்கான இலவச பஸ் மீண்டும் இயக்கப்படுகிறது.கொரோனா காலகட்டத்தின் போது, ரத்து செய்யப்பட்ட டவுன்பஸ் வழித்தட பட்டியலின் அடிப்படையிலேயே, தற்போதும் கோவை நகரில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.சரவணம்பட்டியையும், துடியலுாரையும் இணைக்கும் வழித்தடத்தில், எட்டு தாழ்தள சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதே வழித்தடத்தில் இயங்கி வந்த, மகளிர் இலவசமாக பயணிக்கும் மூன்று சாதாரண டவுன் பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.பயணிகளின் தேவைக்கு ஏற்ப, பஸ்களை மீண்டும் இயக்க கோரி, நமது நாளிதழில் நவ., 15 ம் தேதி செய்தி வெளியானது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். தற்போது மீண்டும் மகளிருக்கான இலவச பஸ் இயக்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக இயக்கப்படும் இந்த பஸ்களால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்கம்

கோவை நகரில், 602 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில்,180 சிகப்பு நிற பஸ்கள். மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில், 422 பஸ்கள் இயக்கப்படுவதாக, அரசு போக்குவரத்துக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றோடு, சமீபத்தில் அதிநவீன தாழ்தள சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்துடன், டவுன் பஸ்களின் தற்போதைய எண்ணிக்கை, 626 ஆக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை