மேலும் செய்திகள்
மாதா ஆலய தேர்த்திருவிழா கருமலையில் கோலாகலம்
15-Sep-2025
மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் புனித ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். சிறுமுகையில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கொடியேற்றம் கடந்த, 7ம் தேதி நடந்தது. திருப்பலிக்கு பங்கு பாதிரியார் பால் சகாயராஜ் தலைமை வகித்தார். 14ம் தேதி காலை கோவை வட்டார முதன்மை குழு விக்டர் பால்ராஜ் தலைமையில் திருப்பலியும், பின்பு ஆலயத்தைச் சுற்றி வேண்டுதல் தேர் பவனியும் நடைபெற்றது. மாலையில் பாதிரியார் ஹென்றி டேனியல் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் பாதிரியார்கள் லூர்து இருதயராஜ், பிச்சை முத்து, பிலிப் ஆகியோர் பங்கேற்று திருப்பலியை நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து அன்னையின் அலங்கார தேர் பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டது. தேர் சத்தி சாலை, தியேட்டர் மேடு, பட்டு ஜவுளிக்கடைகள் வீதி, நால் ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. தேர் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, ஜெபமாலை சொல்லியும், பாடல்களை பாடியும் வந்தனர். இறுதியில் பங்கு பாதிரியார் பால் சகாயராஜ், பாதிரியார் பிச்சை முத்து ஆகியோர் திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கினர். இதேபோன்று மேட்டுப்பாளையத்தில் கோவை சாலையில் அற்புத கெபி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தேர்த்திருவிழா நடந்தது. ஆரோக்கிய அன்னையின் அலங்கார தேர், ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் சாலையில் மீனாட்சி பஸ் ஸ்டாப் வரை சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.
15-Sep-2025