அனல் வீசும் அக்னி நட்சத்திரம் கூடுதல் மோர் வாங்க அறிவுறுத்தல்
கோவை, ; அக்னிநட்சத்திரம் துவங்கியுள்ளதால், மக்கள் வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கி வரும், 28ம் தேதி வரை நீடிக்கும்.கத்திரி வெயில் காலத்தில் வெப்ப அலை வீசும் என்பதால், 12:00 முதல் மதியம் 3:00 மணி வரை, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன், பஸ் நிலையம், சுற்றுலா மையங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், குடிநீர் வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு வழங்க, கூடுதலாக மோர் வாங்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.