ஹவுஸ் ஆப் செரோ ஆர்.எஸ்.புரத்தில் திறப்பு
கோவை; கோவை ஆர்.எஸ்.புரத்தில், ஆடவர்களுக்கான ஹவுஸ் ஆப் செரோ' ஷோரூம் திறக்கப்பட்டது. தரம், கைவினைத்திறன் மற்றும் காலத்தால் அழியாத வடிவமைப்புக்கு பெயர் பெற்ற ஆண்கள் ஆடை பிராண்ட், 1971ம் ஆண்டு நிறுவப்பட்ட ஹவுஸ் ஆப் செரோ'. கோவையில் முதல் ஷோரூம் மேட்டுப்பாளையம் சாலை, துடியலுாரில் உள்ளது. இரண்டாவதாக, ஆர்.எஸ்.புரம், மேற்கு டி.வி.சாமி ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாக பங்குதாரர்கள் பங்கஜ் ராம்பியா, ஆகாஷ் ராம்பியா திறந்து வைத்தனர். ஆண்களுக்கான சர்ட், பேன்ட்ஸ் கண்கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. ரூ.800 முதல் ரூ.3,500 வரையிலான விலையில், ஆடை ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கே.பி.ஆர். மில்ஸ் நிர்வாக இயக்குனர் அனந்த கிருஷ்ணன், வைகிங் நிட்டிங்' உரிமையாளர் பிரேம் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர். முதல் விற்பனையை, டி.என்.சி., சிட்பண்ட்ஸ் இயக்குனர் பார்த்திபன் பெற்றுக் கொண்டார். ஏற்பாடுகளை, பி.ஆர்.பேஷன்ஸ் சார்பில், பங்குதாரர்கள் பிருத்விராஜ், ஐயப்பன் மேற்கொண்டனர்.