மேலும் செய்திகள்
போலீஸ் சோதனையில் 1,560 லாட்டரி பறிமுதல்
6 hour(s) ago
உதய தின விழா கொடியேற்றம்
6 hour(s) ago
சூலுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
6 hour(s) ago
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி நகராட்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்வை மேம்படுத்த, மத்திய அரசின் கடன் வழங்கும் முகாம், நகராட்சி அலுவலகத்தில் நடக்கிறது. கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனர் பாரதி அறிக்கை: கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரதமரின் ‘ஸ்வநிதி’ திட்டத்தின் கீழ், பிணையில்லா எளிய முறையில் வங்கிகள் வாயிலாக கடன் வழங்கும் லோக் கல்யாண் மேளா சிறப்பு முகாம் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. திட்டத்தின் கீழ் தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு, முதல் தவணை கடனாக, 15 ஆயிரம் ரூபாய், இரண்டாவது தவணையில், 25 ஆயிரம், மூன்றாவது தவணையில், 50 ஆயிரம் கடன் உதவி தொகையாக வழங்கப்பட உள்ளன. ஆர்வமுள்ள வியாபாரிகள், நகராட்சி அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன் அடையலாம். சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் வந்து பயன்பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago