உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜடையம்பாளையத்தில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு

ஜடையம்பாளையத்தில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு

மேட்டுப்பாளையம் : காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 109 மாணவர்கள் படிக்கின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாததால், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும், ஒரே வகுப்பில் உட்கார வைத்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.இந்நிலையில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இரண்டு புதிய வகுப்பறைகள் கட்ட, 32.90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வகுப்பறைகள் கட்டி முடித்து, உள்ளேயும், வெளியேயும், பாடம் சம்பந்தமாக, ஓவியங்கள் வரையப்பட்டது. இந்த புதிய வகுப்பு அறைகள் திறப்புவிழா, பள்ளியில் நடந்தது. விழாவுக்கு ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செந்தில்வடிவு வரவேற்றார். நீலகிரி எம்.பி., ராஜா, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் ஆகியோர் வகுப்பறைகளை திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை