உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மெஷினை சுத்தம் செய்து, குங்குமமிட்டு ஆயுத பூஜைக்கு தொழில்நகரம் தயார்

மெஷினை சுத்தம் செய்து, குங்குமமிட்டு ஆயுத பூஜைக்கு தொழில்நகரம் தயார்

கோவை; தொழில்நகரான கோவையில், ஆயுதபூஜையை தொழில்துறையினர் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கிணங்க, தொழில்துறையினர் தங்களின் தொழில் உபகரணங்களை, இறைவனாக கருதி வழிபடுவர். அவ்வகையில், கோவையில் நேற்று தொழில்நிறுவனங்களில் சுத்தம் செய்யும் பணியில் தொழில்துறையினர் ஈடுபட்டனர். குப்பையை அள்ளி, சுத்தம் செய்தனர். இயந்திரங்கள், தொழிற்கருவிகள், உபகரணங்களில் இருந்து அழுக்கு நீக்கி, சுத்தம் செய்து, எண்ணெய் பூசினர். இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றைக் கழுவினர். இயந்திரங்களுக்கு திருநீறு இட்டு, சந்தனம், குங்குமம் வைத்தனர். சில தொழில் நிறுவனங்களில் கட்டடங்களுக்கு வெள்ளையடித்தல், வர்ணம் அடித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். கதவுகளில் அலங்காரத் தோரணங்களைக் கட்டினர். பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், கல்வி நிறுவனங்களிலும் ஆயுத பூஜைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை