சர்வதேச செஸ்; கோவை வீரர் சாம்பியன்
கோவை : மலேசியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில், கோவை வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.மலேசியாவில், 9வது 'ஜோஹர் ஓபன்-2025' சர்வதேச செஸ் போட்டி ஆறு நாட்கள் நடந்தது. இதில், எட்டு நாடுகளை சேர்ந்த, 84 வீரர்கள் பங்கேற்றனர்.9 சுற்றுகளாக நடத்தப்பட்ட இத்தொடரில், இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன், வியட்நாம் கிராண்ட் மாஸ்டர் நுாகுயான் வேன்ஹோயை, இறுதிப்போட்டியில் வீழ்த்தினார்.இதன் வாயிலாக எட்டு வெற்றி, ஒரு டிரா என, 8.5 புள்ளிகளுடன் கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார். மற்றொரு இந்திய சர்வதேச மாஸ்டர் ராகுல், ஏழு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். சீனாவின் சர்வதேச மாஸ்டர் லீ பூ, ஏழு புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். ஈரோட்டை பூர்வீகமாக கொண்டு, கோவையில் வசிக்கும் இனியனுக்கு, வாழ்த்துகள் குவிகின்றன.