உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுயானைகளின் பாச்சா... பலிக்காது! பேட்டரி மின்வேலி வந்தாச்சு

காட்டுயானைகளின் பாச்சா... பலிக்காது! பேட்டரி மின்வேலி வந்தாச்சு

தொண்டாமுத்தூர்: கோவை வனச்சரகத்தில், காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க பேட்டரியால் இயங்கும் மின் வேலி அமைக்கப்படுகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விளைநிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக, கோவை வனச்சரகத்தில், அட்டுக்கல் முதல் பொம்மணம்பாளையம் வரையுள்ள 5 கி.மீ., தொலைவிற்கும், குப்பேபாளையம் முதல் தேவராயபுரம் வரையுள்ள 5 கி.மீ., தொலைவிற்கும், வனத்துறை சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பில், உருக்கு கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

இந்த 10 கி.மீ., பகுதியில், காட்டு யானைகள் வெளியேறுவது குறைந்தது. இருப்பினும், கூட்டமாக வரும் யானைகள் உருக்கு கம்பி வேலி இரும்பு தூண்களில் மோதுவதால், இரும்புத்தூண் வளைந்து விடுகிறது. ஆகவே திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில், இந்த உருக்கு கம்பியில், பேட்டரியால் இயங்கும் மின் வேலி அமைக்கப்படுகிறது. வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் இரும்புத்தூண்களை வளைத்து விடுகின்றன. ஆகவே பேட்டரியால் இயங்கும் மின்வேலி அமைக்கப்படுகிறது. இது யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க உதவும். சோதனை முறையில் கோவை வனச்சரகத்தில், 5 கி.மீ., தொலைவுள்ள உருக்கு கம்பி வேலியில், பேட்டரி மின் வேலி அமைக்கப்பட்டு வருகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூன் 14, 2026 09:43

யானைகளின் இருப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டு, பின்னர் அந்த யானைகளுக்கு தடுப்பு அமைப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். முடிந்தால் இந்த ஆக்கிரமிப்பாளர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை