உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

கோவை; துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்காக, தமிழக அரசு சார்பில் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழாவின்போது, தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது.துணிச்சல் மற்றும் வீரசாகச செயல் புரிந்த, தமிழகத்தை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தன் விபர குறிப்பு, உரிய விபரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், www.awards.tn.gov.inஎன்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஜூன், 16க்குள் கருத்துரு சமர்ப்பிக்க, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதேபோல், பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் ஆகிய பிரிவுகளின் கீழும் விருது வழங்கப்படுகிறது. இணைய தளம் மூலமாக விண்ணப்பித்து, ஜூன், 12க்குள் கருத்துரு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை