உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பராயன் கோயில் சுவாமி அழைத்தல்

கருப்பராயன் கோயில் சுவாமி அழைத்தல்

தொண்டாமுத்தூர்: அட்டுக்கல், ஆலங்குட்டை கருப்பராயன் கோயிலில் ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கும். இந்தாண்டு சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி, தொண்டாமுத்தூர் அம்மன் நகரில் உள்ள விநாயகர் கோயிலில், சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. அங்கிருந்து கரகம் ஜோடித்து, மேளதாளங்களுடன் அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். கருப்பராயனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !