உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவுசிகா நதி புனரமைப்பு பணி துவக்கம்

கவுசிகா நதி புனரமைப்பு பணி துவக்கம்

கோவில்பாளையம்: -: கவுசிகா நதியை மீட்டெடுக்கும் பணியில் கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. வையம்பாளையத்தில் துவங்கி பச்சாபாளையம் வரை, 6 கி.மீ., தூரத்திற்கு புனரமைப்பு செய்யும் பணி துவக்க விழா, கோவில்பாளையத்தில் நேற்று நடந்தது. கோவை கலெக்டர் பவன்குமார் பணியை துவக்கி வைத்து பேசுகையில், கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு செய்யும் பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தரும். மேலும் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும், என்றார். கோயம்புத்தூர் மான்செஸ்டர் ரோட்டரி சங்கம் 3206 நிர்வாகி சுந்தர வடிவேலு பேசுகையில், கவுசிகா நதியை புனரமைக்க, ரோட்டரி சங்க சர்வதேச நிதி பெற்று, மார்ட்டின் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கி உள்ளோம், என்றார். கவுசிகா நிர்வாக அறங்காவலர் செல்வராஜ் பேசுகையில், இதுவரை 22 குளங்களில் சீரமைப்பு பணி செய்து, 46 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். ஆறு கி.மீ., தூரத்திற்கு சீமை கருவேல மரங்களை அகற்றி, இரு புறமும் கரைகளை பலப்படுத்தி பணிகள் செய்ய உள்ளோம், என்றார். நிதி அளித்த உதவிய லீமா ரோஸ் மார்ட்டினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜசேகர், செந்தில் ராஜகோபால், பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை