உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; 24ம் தேதி சயான்  ஆஜராக சம்மன்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; 24ம் தேதி சயான்  ஆஜராக சம்மன்

கோவை; கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயானை வரும், 24ம் தேதி ஆஜராக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில், 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.இதுகுறித்து, கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக, 500க்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானிடம், மீண்டும் விசாரணை நடத்த அவரை ஏப்.,24ல் கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.ஏற்கனவே ஒருமுறை அவருக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்திய நிலையில், தற்போது இரண்டாம் முறையாக அனுப்பப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக, தன்னால் அன்றைய தினம் ஆஜராக முடியவில்லை என்று சயான் தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வரும், 24ம் தேதி கோவையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கர்சனுக்கு சம்மன்

கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோத்தகிரியை சேர்ந்த கர்சன் செல்வம் என்பவரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவரை இன்று ஆஜராக, சம்மன் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ