பாரதியார் பல்கலையில் மாணவர்களுக்கு லேப்டாப்
வடவள்ளி: பாரதியார் பல்கலையில், தமிழக அரசு சார்பில், 143 மாணவ, மாணவிகளுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, பாரதியார் பல்கலையில் படிக்கும் இளங்கலை பட்ட மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி அரங்கத்தில் நடந்தது. எம்.பி. ராஜ்குமார் 143 மாணவ, மாணவிகளுக்கு, லேப்டாப்பை வழங்கினார். பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.