உள்ளூர் செய்திகள்

சாய்ந்த மின்கம்பம்

1. சாய்ந்த மின்கம்பம் பாப்பநாயக்கன்புதூர், சாஸ்திரி வீதி 2-ல் மின்கம்பம் விழுந்து 3 ஆண்டுகளாகியும், புதிய மின்கம்பம் அமைத்து தெருவிளக்கு பொருத்தப்படவில்லை. மின்கம்பம் மற்றும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். -குனசேகரன்: 2. சாலை சீரமைக்கப்படவில்லை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். -உதயகுமார்: 3. ஒளிரா விளக்கு கணபதி, மணியக்காரம்பாளையம் செந்தில் வெள்ளவன் நகரில் உள்ள தெருவிளக்கு இரண்டு மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். -ஜெயக்குமார்: 4. ஒளிரா விளக்கு வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோடு, அண்ணா தெருவில் தெருவிளக்கு இரண்டு மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. தெருவிளக்கை உடனடியாக சரிசெய்ய வேண்டும். -கார்த்திகேயன்: 5. சாலையில் கொட்டப்படும் குப்பைகள் மேட்டுப்பாளையம் ரோடு, தனியார் வங்கி கட்டடம் அருகில், ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பை முறையாக அகற்றப்பட வேண்டும். -சிவகுமார்: 6. சாலையில் குவிந்த மணல் திருச்சி ரோடு, ஹைவேஸ் காலனி அருகே ரோட்டோரம் மணல் குவிந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. -சந்தோஷ்: 7. வீணாகும் அம்மா குடிநீர் மையம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் பயன்பாட்டின்றி துவங்கப்பட்ட அம்மா குடிநீர் வினியோகிக்கும் மையம் வீணாகி வருகிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும். -காந்திமதி: 8. மீதி ரோட்டை காணோம்! மருதமலை ரோட்டில் முல்லை நகர் பகுதியில் பாதி ரோடு சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. சாலையை முறையாக சீரமைக்க வேண்டும். -சந்தியா:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை