உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாம்பரம் - கோவை சிறப்பு ரயிலில் எல்.எச்.பி., பெட்டியாக மாற்றம்

தாம்பரம் - கோவை சிறப்பு ரயிலில் எல்.எச்.பி., பெட்டியாக மாற்றம்

பொள்ளாச்சி; சென்னை தாம்பரம் - கோவைக்கு பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் பெட்டிகள், அதிநவீன எல்.எச்.பி.,பெட்டியாக மாற்றப்பட்டுள்ளன.சென்னை தாம்பரத்தில் இருந்து கோவைக்கு பொள்ளாச்சி வழியாக, அக்., 13ம் தேதி முதல், டிச.,1ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு ரயில்வே சேவை வரும், 2025 பிப்., 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், ஏசி பெட்டிகள், சிலிப்பர் கோச், மாற்றுத்திறனாளிக்கான பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த ரயில் பெட்டிகள், அதி நவீன எல்.எச்.பி.,கோச் பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட இந்த பெட்டிகள், இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அதிவேகமாக செல்வதுடன், அதிகளவு பயணியரை ஏற்றிச் செல்ல முடியும். டிஸ்க்பிரேக் சிஸ்டம் கொண்டதால் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.

முன்பதிவில்லை

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:கோவை - தாம்பரம் ரயிலில், முன்பதிவில்லா கோச் இல்லை. இது ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பாக இருக்கும். இதற்கு மாற்றாக, முன்பதிவில்லா கோச் மீண்டும் கொண்டு வர வேண்டும். இந்த ரயில் நிரந்தரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் இருந்து கிளம்பும் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை