உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டுக்குள் ஆண் சடலம்; போலீசார் விசாரணை

வீட்டுக்குள் ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை; வடவள்ளி பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 42; கோவை வடவள்ளி, வி.கே.எஸ்., நகரில் தங்கியிருந்து மருந்து சப்ளை தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.ஹரிகிருஷ்ணன் தொழில் செய்வதற்காக கடன் வாங்கியிருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் வீட்டு அருகில் வசிக்கும் ரேவதி என்பவர், ஹரி கிருஷ்ணனின் தந்தைக்கு அழைத்து, வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவர், ஹரிகிருஷ்ணனிடம் பணியாற்றி வரும் ஜெயக்குமாரை அழைத்து தெரிவித்தார்.ஜெயக்குமார் நேரில் சென்று பார்த்த போது, வீட்டுக்குள் ஹரிகிருஷ்ணன் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை