உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வானவில் வண்ணங்களை ரங்கோலியாக மாற்றிய மங்கையர்; தினமலர் மார்கழி விழாக்கோலம் போட்டியில் ஜோர்

வானவில் வண்ணங்களை ரங்கோலியாக மாற்றிய மங்கையர்; தினமலர் மார்கழி விழாக்கோலம் போட்டியில் ஜோர்

கோவை : கோவையில் தினமலர் மற்றும் தி சென்னை சில்க்ஸ் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில், 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.அபார்ட்மென்ட்களில் வசிக்கும் பெண்கள், இந்த கோலப் போட்டியில் பங்கேற்று புள்ளிக்கோலம், பூக்கோலம், ரங்கோலி என, விதவிதமான வண்ணக் கோலங்களை வரைந்து, பரிசுகளை வென்று வருகின்றனர்.கோவை கணபதி நாராயணா நகர் பகுதியில் உள்ள, திருப்தி அபார்ட்மென்டில் நேற்று நடந்த கோலப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பூக்கோலம், புள்ளிக்கோலம் மற்றும் ரங்கோலி கோலங்களை போட்டு அசத்தி இருந்தனர்.இந்த போட்டியில் பங்கேற்ற பெண்கள் பலர், ரங்கோலி கோலத்தை அதிகம் தேர்வு செய்து வரைந்து இருந்ததால், விண்ணில் இருந்த வானவில், மண்ணுக்கு வந்தது போல் அபார்ட்மென்ட் வளாகமே வண்ணமயமாக காட்சி அளித்தது.பூக்கோலத்தில் ருகானி மற்றும் மைதிலி ஆகியோர் பரிசு பெற்றனர். புள்ளி கோலத்தில் லலிதா, சுதர்சனா, மகேஸ்வரி மற்றும் அனுராதா ஆகியோர் பரிசு பெற்றனர்.ரங்கோலி கோலத்தில் விஜயலட்சுமி, நந்தினி, சுபா, சுகன்யா, விஜய்ஈஸ்வரி மற்றும் கவுதமி ஆகியோர் பரிசு பெற்றனர்.ரங்கோலி கோலத்தில் பரிசு பெற்ற விஜயலட்சுமி கூறுகையில், ''நான் சிறு வயதில் நோட்டு புத்தகத்தில் புள்ளிக்கோலம் போட்டு பழகினேன். இப்போது என் குழந்தைக்கும், கோலம் போட சொல்லிக்கொடுத்து வருகிறேன்,'' என்றார்.இந்த மார்கழி விழாக்கோல நிகழ்ச்சியை, இ.எல்.ஜி.ஐ., அல்ட்ரா மேடு பெர்பெக்ட்லி மற்றும் ஸ்ரீபேபி பிராப்பர்ட்டிஸ் நிறுவனத்தினர், இணைந்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி