உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 12 ஊராட்சிகளில் இன்று மெகா துாய்மை பணி

12 ஊராட்சிகளில் இன்று மெகா துாய்மை பணி

அன்னூர்: இன்று (4ம் தேதி) கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சிகளில் மெகா தூய்மை பணி நடைபெறுகிறது. கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் தூய்மை பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். வருகிற 4ம் தேதி, (இன்று) அன்னூர் ஒன்றியத்தில் குப்பேபாளையம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் கீரணத்தம், சூலூர் ஒன்றியத்தில் நீலம்பூர், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பூராண்டாம் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் பன்னிமடை, காரமடை ஒன்றியத்தில் கெம்மாராம்பாளையம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் மெகா தூய்மை பணி செய்ய வேண்டும். பணி செய்வதற்கு முன்பும், செய்த பிறகும், போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும். 100 சதவீதம் தூய்மை பணி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை