மேலும் செய்திகள்
பொது தேர்வுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்
05-Feb-2025
கோவை; கோவை, பச்சாபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி, இயந்திர பொறியியல் துறை மற்றும் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை 'ஸ்மார்ட் இ-மொபிலிட்டி' மற்றும் திறன் மேம்பாட்டு மையம் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை மையமாக கொண்டு திறக்கப்பட்டுள்ளது. எஸ்.என்.ஆர்., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.இம்மையம், டிவைஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மேக்னடிக் அண்டு கண்ட்ரோல்ஸ் நிறுவனங்கள் நிதியுதவி செய்துள்ளது. தொடர்ந்து, இந்நிறுவனங்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகம் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்துறையுடன் ஆசிரியர் மற்றும் மாணவர்கள்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மையமாக கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.நிகழ்வில், எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் அலமேலு, டிவைஸ் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் சேகர் மலானி, மேக்னடிக் அண்ட் கண்ட்ரோல்ஸ் நிர்வாக இயக்குநர் அஜய், கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
05-Feb-2025