உங்கள் கழிவை கவனியுங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை: 'உங்கள் கழிவைக் கவனியுங்கள்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் நடந்தது. ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள், நீர்வழித்தடங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், நகரின் ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார். சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., கிரிபிரசாத், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.