மேலும் செய்திகள்
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
18-Jan-2025
பெ.நா.பாளையம்; துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்கு நடமாட்டத்தால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ., காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்கின் நடமாட்டத்தால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதிகளில் உள்ள வீடுகளின் முன்புறமுள்ள 'கேட்' களின் மீது அமர்ந்து கொள்கிறது. வாழைப்பழம் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்தால், மட்டுமே அங்கிருந்து நகர்கிறது. பொதுமக்கள் கூறுகையில், 'ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் லாரிகளில் தவறுதலாக ஏறிய குரங்குகள், மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அவர்கள் அளிக்கும் பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை உண்டு பழகியதால், மாத கணக்கில் இங்கேயே தங்கி விடுகின்றன. இரவு நேரங்களில் மொபைல் போன் டவர்களில் ஏறி படுத்துக் கொள்கின்றன. பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நடமாடும் இக்குரங்குகளை வனத்துறையினர் பத்திரமாக கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதியில் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
18-Jan-2025