உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சியை கண்டித்து வரும் 21ல் மா.கம்யூ., போராட்டம்

மாநகராட்சியை கண்டித்து வரும் 21ல் மா.கம்யூ., போராட்டம்

கோவை : கோவையில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகத்தை, 21ல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே சொத்து வரி உயர்வால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பா தாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயர்த்தியிருப்பதால், மக்களுக்கு அதிருப்தியை உருவாக்கியுள்ளது.அதனால், கோவை டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தை, 21ம் தேதி (புதன்கிழமை) காலை, 10:00 மணிக்கு முற்றுகையிடும் போராட்டத்தை, மாவட்ட மா.கம்யூ.,அறிவித்துள்ளது.மா.கம்யூ.,வினர் கூறுகையில், 'பரப்பளவு கணக்கில் கட்டணம் தீர்மானிக்கும் முறையை கைவிட வேண்டும். 'குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். வரி மேல் வரி போட்டு, மக்களை வதைக்கக் கூடாது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை