உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாராயண குரு சமாஜ பொதுக்குழு கூட்டம்

நாராயண குரு சமாஜ பொதுக்குழு கூட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நாராயண குரு சமாஜத்தின், 30வது பொதுக்குழு மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் குறித்த நிர்வாகிகள் கூட்டம், நடந்தது. சமாஜ அரங்கில் நடந்த கூட்டத்திற்கு நாராயண குரு தமிழக பேரமைப்பு தலைவர் செந்தாமரை, தலைமை வகித்தார். தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வும் நடந்தது. அதன்படி, சமாஜ கவுரவ தலைவராக ஜெயபிரகாஷ், செயல் தலைவராக மாணிக்கம், துணை தலைவராக மணிகண்டன், இணைச் செயலாளராக உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல, மகளிரணி ஆலோசனைக் குழு நிர்வாகிகளாக சிவபாக்கியம், சாந்தி, ரேணுகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவில் சமாஜ தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !