உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி

தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி திஷா பள்ளியில், சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டிகள் நடக்கிறது. அதில், துாத்துக்குடி விகாசா பள்ளி முதல்வர் சார்லஸ், போட்டியை துவக்கி வைத்தார். துணை முதல்வர் லுாலு சார்லஸ், போட்டி நடுவர் சுரேஷ்குமார், படுகோனி அமைப்பு சித்தார்த், ஓம்பிரகாஷ், அக் ஷயகுமார், திஷா பள்ளியின் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், முதல்வர் உமாரமணன் முன்னிலை வகித்தனர். தேசிய அளவிலான போட்டியில், கர்நாடகா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள், 14,17 மற்றும், 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடைபெறுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறுவோர், அகில இந்திய பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு பெறுவர் என, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை