உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்துகளை தடுக்க புதிதாக வேகத்தடை

விபத்துகளை தடுக்க புதிதாக வேகத்தடை

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் அருகே வேளாங்கண்ணி பகுதியில், அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், விபத்துக்கள் நடக்காமல் இருக்கவும், கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலை துறையினர் புதிதாக வேக தடைகளை அமைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் மிகவும் வேகமாக வருகிறது. இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. வேளாங்கண்ணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடையால் விபத்து குறையும் என நம்பிக்கை உள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி