‘குப்பை எடுப்பதே இல்லை’
சுண்டக்காமுத்தூர்: மாநகராட்சி சார்பில் 89வது வார்டுக்குட்பட்ட சுண்டக்காமுத்தூரில், பகுதி சபா கூட்டம் நேற்று நடந்தது. வார்டு கவுன்சிலர் முருகன் தலைமை வகித்தார். இதில் உதவி பொறியாளர் நவநீதகிருஷ்ணன் நியமன அலுவலராக இருந்து முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட வேண்டிய அடிப்படை பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வார்டில் தினசரி குப்பை எடுப்பதில்லை. சாலையோரத்தில் குப்பை அதிகரிக்கிறது. சிறுவாணி குடிநீர், மண் கலந்து நிறம் மாறி வருகின்றது என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குப்பையை தினசரி சுத்தம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர். ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.