பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் பஞ்சகோச ஆரோக்கிய சோதனை
கோவை; 'நலம்' என்ற பெயரில், முழு ஆரோக்கிய பரிசோதனை, பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன் கூறியதாவது:என்னுடன் இணைந்த மருத்துவக் குழுவினர், சுபாஷினி, சுதர்சன், காவிய வர்ஷினி, திவ்யா, சுவேதா, தினேஷ் நரசிம்மன், 'அனாதி' அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி கோமதி ஆகியோர் ஒருங்கிணைப்பில், தைத்திரிய உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பஞ்சகோச அடிப்படை தத்துவத்தை புரிந்து, இப்பரிசோதனை உருவாக்கியுள்ளோம்.அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆன்மிக கோசம் என ஐந்து அடுக்குகளை கொண்ட பஞ்சகோசம், உடல், உளவியல் பரிமாணங்களின் ஒன்றோடொன்று தொடர்புடையது.இதற்கான பரிசோதனையாக, ஒரு வினாத்தாள் தயார் செய்து, ஆராய்ந்த பின், பொதுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் வெளியிட உள்ளோம். இது, உடல், மனம், ஆற்றல், அறிவு, பேரின்பம் ஆகியவற்றை இணைப்பதற்கான ஒரு முயற்சி.நோய் வரும் முன் தடுக்க மட்டுமல்லாமல், ஒருவரின் சுய முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் என்பதே, பஞ்சகோச தத்துவத்தின் அடிப்படை.இவ்வாறு, அவர் கூறினார்.