உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதிமாதம் 5ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்கணும்!

பிரதிமாதம் 5ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்கணும்!

பொள்ளாச்சி,; ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் எச்.எம்.எஸ்., சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.கோவை மண்டல கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் எச்.எம்.எஸ்., சங்கத்தின், பொள்ளாச்சி நகர பொது உறுப்பினர்கள் கூட்டம், வங்கி ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.நகரத்தலைவர் திருமலைச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ராஜாமணி, புதிதாக நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை, 60 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்களுக்கு, அதற்கான ஆணை வழங்கினார்.மாநில அமைப்பு செயலாளர் மனோகரன், நலவாரியத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து பேசினார்.கூட்டத்தில், உதவித்தொகையை உயர்த்தியும், அதனை பாலின வேறுபாடு இல்லாமல் வழங்க வேண்டும். வீடு கட்ட மானியம் பெற எளிய நடைமுறை வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.பெண் தொழிலாளர்களுக்கு, 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க செயல்தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் சண்முகம், நகர செயல்தலைவர் குமார், பொருளாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி