உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குரங்குகள் தொல்லை நிம்மதியிழந்த மக்கள்

குரங்குகள் தொல்லை நிம்மதியிழந்த மக்கள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சி கோ-–ஆப்ரேட்டிவ் காலனியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இப்பகுதியினர் கூறியதாவது: கடந்த ஓராண்டுக்கு முன், நான்கு குரங்குகள், இப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்தன. விரட்டினால், அருகே உள்ள மொபைல் போன் டவரிலும், தென்னை மரங்கள், மாமரங்களில் ஏறிக்கொள்கின்றன. தற்போது, 10க்கும் மேற்பட்ட குரங்குகள் உலா வருகின்றன. திறந்திருக்கும் வீடுகளின் உள்ளே நுழைந்து, உணவு பொருட்களை உட்கொள்கின்றன. விரட்டினால் கடிக்க வருகிறது. வீடுகளில் துவைத்து காய வைக்கும் துணிகளை, கீழே போட்டும், துாக்கிச் சென்று பல இடங்களில் போட்டு விடுகின்றன. மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்து குடிக்கின்றன. தண்ணீர் வரும் பைப்புகள் வழியாக மாடியில் இருந்து கீழே இறங்கும் போது, பைப்புகளை உடைக்கிறது. வனத்துறையினர், கூண்டு வைத்த குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ