உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்டையில் கேமராவுடன் வலம் வரும் போலீசார்

சட்டையில் கேமராவுடன் வலம் வரும் போலீசார்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷனில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இச்சூழலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சட்டையில், கேமராவுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார், ரோந்துசெல்லும் போது நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்தல், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிக்காக, இந்த கேமரா வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.இது போன்று, பொள்ளாச்சி பகுதியில் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் போலீசாரும், 'பாடி ஓன் கேமரா'வுடன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இப்போலீசார், போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து செல்லும் போது, நடக்கும் நிகழ்வுகள் பதிவாகிறது. இதனால், சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும். தேவையில்லாத புகார்களை கட்டுப்படுத்த முடியும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ