ஐ.பி.ஏ.ஏ. கால்பந்து போட்டியில் கலக்கும் பாலிடெக்னிக் அணிகள்
கோவை; 'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோ சியேஷன்' (ஐ.பி.ஏ.ஏ.) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஆண்களுக்கான கால்பந்து போட்டி, பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது. 10க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடி வருகின்றன. கல்லுாரியின் வார்ப்படவியல் துறை தலைவர் அரசு, போட்டியை துவக்கி வைத்தார். முதல் போட்டியில், எஸ்.ஆர்.எம்.வி. பாலிடெக்னிக் அணியும், எஸ்.ஆர்.ஐ. பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்.வி. அணி வெற்றி பெற்றது. ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் அணி, 4-2 என்ற கோல்களில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணியும், ஸ்ரீ நாராயணகுரு பாலிடெக்னிக் அணி, 4-2 என்ற கோல்களில், சங்கரா பாலிடெக்னிக் அணியையும் வென்றன. கிருஷ்ணா பாலிடெக்னிக் அணி, 2-0 என்ற கோல்களில் இந்துஸ்தான் பாலிடெக்னிக் அணியை வென்றது. உடற்கல்வி இயக்குனர் முரளிகிருஷ்ணன், போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.