மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
19-Sep-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளில், விஜயதசமி அன்று, முன்பருவ கல்விக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 400க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக்கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது. இதில், இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, முன்பருவக்கல்வி கற்றுத் தரப்படுகிறது. இதில் செய்கை பாடல், கதை, விளையாட்டு, கல்வி உபகரணங்கள் வாயிலாக கற்றுத்தரப்படுகிறது. அதன்படி, அக்., 2 விஜயதசமி அன்று, அங்கன்வாடிகளில் முன்பருவ கல்விக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. பெற்றோர்கள் தங்களது, ஆதார் அட்டை, குழந்தைகளின் பிறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது: விஜயதசமி அன்று, 2 வயது பூர்த்தியான குழந்தைகளை அங்கன்வாடிகளை சேர்க்கலாம். அன்றைய தினம் காலை முதல் பணியாளர்கள், பணியில் இருப்பர். தற்போது, அந்தந்த பகுதி அங்கன்வாடி பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும் முன்பருவக் கல்வி குறித்து பெற்றோர்களிடம் விரிவாக தெரிவிக்கின்றனர். முன் பருவக்கல்வி சேர்க்கைக்காக விஜயதசமி அன்று குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அழைத்து வருமாறும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு, கூறினர்.
19-Sep-2025