உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, '108' ஆம்புலன்சில் பிரசவத்துக்காக அழைத்து சென்ற கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது.பொள்ளாச்சி அருகே, ஜலத்துாரை சேர்ந்த தொழிலாளி பாலசந்திரன் மனைவி காயத்ரி,29. இவர், பிரசவத்துக்காக நேற்று வடுகபாளையம், '108' ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நுட்புனர் மணிகண்டன், டிரைவர் தங்கவேல் ஆகியோர் அழைத்து வந்தனர்.மருத்துவமனை செல்லும் முன்பே, கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்சிலேயே, அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் பாதுகாப்பாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !