உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழுதான பொக்லைனில் தனியார் பஸ் உரசி நின்றது

பழுதான பொக்லைனில் தனியார் பஸ் உரசி நின்றது

கிணத்துக்கடவு,;கிணத்துக்கடவு, செக்போஸ்ட் அருகே சர்வீஸ் ரோட்டில் பொக்லைன் இயந்திரம் பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதில், சர்வீஸ் ரோட்டில் இருபுறமும் பெரும்பாலான வாகனங்கள் 'ஒன்வே' திசையில் பயணிக்கின்றனர். இதில், நேற்று செக்போஸ்ட் அருகே, தனியார் பைக் ஷோரூம் முன்பாக, ரோட்டில் சென்ற பொக்லைன் இயந்திரம் திடீரென பழுதாகி நின்றது.இவ்வழியில், கோவை நோக்கி சென்ற தனியார் பஸ், பொக்லைன் இயந்திரத்தில் லேசாக உரசி நின்றது. இதனால் சர்வீஸ் ரோட்டில் ஒரு மணி நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது. இதை போலீசார் கவனித்து, அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பினார்கள். மேலும், பொக்லைன் இயந்திரத்தை நீண்ட நேரம் போராடி சரி செய்து ஓட்டி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ