உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் பஸ்கள் அதிவேகம்: போலீசார் அபராதம் விதிப்பு

தனியார் பஸ்கள் அதிவேகம்: போலீசார் அபராதம் விதிப்பு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில், அதிவேகமாக இயக்கிய இரண்டு தனியார் பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி --- கோவை வழித்தடத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், பல தனியார் பஸ்கள் விதிமீறி, ஸ்டேஜில் நிற்காமல் செல்வது, மேம்பாலத்தின் மீது செல்வது, போட்டி போட்டு வேகமாக இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதைத்தொடர்ந்து, மக்கள் பலர் புகார் அளித்தும் பயனில்லாமல் இன்று வரை இப்பிரச்னை தொடர்கிறது. இந்நிலையில், பொள்ளாச்சி --- கோவை ரோட்டில் இயங்கிய இரு தனியார் பஸ்கள் (வீ.வீ., மற்றும் பாலாஜி) அதிவேகமாக சென்றதால், கிணத்துக்கடவு அருகே போலீசார் சோதனை செய்து, இரு பஸ்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், அதிவேகமாக பஸ் இயக்கூடாது என அறிவுறுத்தினர்.பொதுமக்கள் கூறுகையில், தனியார் பஸ் 'அட்ராசிட்டி'யால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரி செய்ய அதிக தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். மேலும், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபடும் பஸ்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ