உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை அரங்கநாதர் கோவிலில் பொது விருந்து

காரமடை அரங்கநாதர் கோவிலில் பொது விருந்து

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவிலில் மதியம் 12 மணி அளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவிலுக்கு வந்த காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலிலும் பொது விருந்து நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை