பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு பூஜை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.புரட்டாசி மாதத்தில், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுவாமிக்கு, சிறப்பு ேஹாமங்கள், அபிேஷகம், அலங்கார வழிபாடு நடக்கிறது. குறிப்பாக, சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமாளுக்கு விரதம் இருந்து, வீடு வீடாக யாசகம் பெற்று, சுவாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு நேற்று மாலை, 5:30 மணிக்கு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையான இன்று காலை, 6:30 மணிக்கு சுதர்சன ேஹாமம், காலை, 7:30 மணிக்கு மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நேற்று நடைபெற்றன. தொடர்ந்து, இன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.