உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புரட்டாசி பிறந்தது கோவில்களில் கோலாகலம்

புரட்டாசி பிறந்தது கோவில்களில் கோலாகலம்

- நிருபர் குழு -புரட்டாசி முதல் நாளான நேற்று, கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத துவக்கத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபாடு செய்தனர். டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவில், ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், புரட்டாசி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. * வால்பாறை அடுத்துள்ள, அக்காமலை பாலாஜி கோவிலில் புரட்டாசி முதல் நாளான நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு அபிேஷகபூஜையும் நடந்தது. தொடர்ந்து, காலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பாலாஜி சுவாமி அருள்பாலித்தார். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்கு, நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார். * உடுமலை தளி ரோட்டில், உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவிலில், தங்க கவச அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். இதே போல், உடுமலை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி