நோயின் தன்மையை அறிய கே.எம்.சி.எச்.ல் மறு ஆலோசனை
கோ யம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் நடக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறு ஆலோசனை வழங்கும் இலவச முகாம், வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. கே.எம்.சி.எச். நிர்வாகத்தினர் கூறியதாவது: எந்த நோயாக இருந்தாலும், ஒரு மருத்துவர் உறுதிப்படுத்தினால் கூட, அதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள மற்றொரு டாக்டரிடம் மறு ஆலோசனை செய்வது தவறில்லை என்கிறது மருத்துவ உலகம். ஒருவருக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பது தெரிந்தவுடன் இது ஏன், எப்படி, எதனால் வந்தது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். குடும்ப மருத்துவர் நோய் பாதிப்பை உறுதிப்படுத்தினாலும் கூட, அவர் வழங்கிய சான்று சரியானதா என்பதை கண்டறிய இணையதளத்தில் தேடுகின்றனர். நோய் பாதிப்பின் தன்மை வேறு வேறாக இருக்கும்போது, இணையத்தில் உள்ள பல்வேறு பதில்கள், விளக்கங்கள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். புற்றுநோய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இதற்கு ஒரே மாதிரியான விளக்கம் பொருந்தாது. புற்றுநோய் பாதிப்பை மருத்துவர் உறுதி படுத்தினால் கூட, மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. புற்று நோய் உள்ளதா, இல்லையா, சரியான சிகிச்சை என்ன என்பதை அறியவும், எந்த மருத்துவமனைக்கு செல்வது, எந்த டாக்டரை பார்ப்பது, எவ்வளவு செலவு ஆகும் என்பதை அறியவும், அவிநாசி ரோட்டில் உள்ள கோயம்புத்துார் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், மறு ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான முகாம், வரும் 31ம் தேதி வரை தினமும் காலை 9 முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. முகாமில் பங்கேற்போருக்கு கூடுதலாக ஏதாவது பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது இருப்பின், அதை சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளலாம். மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 87548 -87568 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.