உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மின் கட்டண சீர்திருத்தங்களை அரசு பரிசீலனை செய்ய கோரிக்கை

 மின் கட்டண சீர்திருத்தங்களை அரசு பரிசீலனை செய்ய கோரிக்கை

கோவை: ஜவுளி, நூற்பாலைகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சில மின் கட்டண சீர்திருத்தங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா ) அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிஸ்பா கவுரவச் செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் கூறியுள்ளதாவது: தமிழக ஜவுளி, நுாற்பாலை துறையின் போட்டித் திறனை மேம்படுத்த, நீண்ட காலமாக உள்ள சில மின் கட்டண சீர்திருத்தங்களை அரசு பரிசீலிக்க வேண்டும். போட்டித் திறன் அடிப்படையில் கட்டணத்தை மறு சீரமைக்க வேண்டும். தொடர்ச்சியான உற்பத்தி மேற்கொள்ளும் நுாற்பாலைகளுக்கு அதிகபட்சம், உச்ச நேர கட்டண முறைகளை மறுபரிசீலனை செய்து உற்பத்தி நிலை தன்மையை ஊக்குவிக்க சலுகைகளை வழங்க வேண்டும். மேற்கூரை சூரிய மின் உற்பத்திக்கான நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து, மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்க வேண்டும். மின் கட்டண சீர்திருத்தம் செய்தால், தமிழக நூற்பாலை மற்றும் ஜவுளி துறையில் போட்டி திறன் உயர்ந்து புதிய முதலீடுகள் வேலை வாய்ப்புகள் உயரும். மாநிலத்தின் தொழில், ஏற்றுமதி வளரும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ