மேலும் செய்திகள்
வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை
19-Jul-2025
கோவை, ; சுதந்திர தின அறிவிப்பில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை, தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என, தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளில், 15 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட சிறப்பு பாடங்களில், பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு, மாதம், 12 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல், தற்காலிக பணியாளர்களாக, வேறு எந்த உதவி தொகையும், சலுகைகளும் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். குறைந்த சம்பளத்தை கொண்டு குடும்ப தேவைகளை சமாளிக்க முடியவில்லை. எனவே, தமிழக முதல்வர், சுதந்திர தினத்தில் வெளியிட உள்ள அரசின் அறிவிப்புகளில், தேர்தல் வாங்குறுதியில் கூறியபடி, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும். முதல்வரின் இந்த அறிவிப்பால், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களின் கஷ்டம் தீரும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
19-Jul-2025