உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சரிந்த நிலையில் மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை

 சரிந்த நிலையில் மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை

வால்பாறை: குடியிருப்பில் சரிந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை நுழைவு வாயிலில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்புக்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளதால், இரவு நேரத்தில் வனவிலங்குகள் அதிகளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. குறிப்பாக, யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் இரவு நேரத்தில் குடியிருப்பில் முகாமிடுகின்றன. இந்நிலையில், நகராட்சி சார்பில் இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட பெரும்பாலான மின்விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. பொதுமக்கள் கூறியதாவது: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்பில், பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. யானைகள் தாக்கி சேத மடைந்த மின்கம்பம் சரிந்த நிலையில் உள்ளது. இதனால், குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, சரிந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் மாற்றியமைக்க வேண்டும். மேலும், எரியாத தெரு விளக்குகளை சரி செய்து, கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ