உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை; சங்கரா கண் மருத்துவமனை சார்பில், 36வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.கோவை சத்தி சாலை, சரவணம்பட்டியிலுள்ள சங்கரா கண் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், புரோசோன் மால் வழியாக, விளாங்குறிச்சி சாலையை அடைந்து, மீண்டும் சங்கரா கண் மருத்துவமனையை அடைந்தது.விழிப்புணர்வு ஊர்வலத்தை, சரவணம்பட்டி போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ., கார்த்தி துவக்கி வைத்தார். மருத்துவமனை ஒருங்கிணைப்பு மேலாளர் பினிதா, சாந்தி உள்ளிட்ட செவிலியர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ