| ADDED : டிச 01, 2025 05:04 AM
நெகமம்: நெகமம், கப்பினிபாளையத்தில் ரோட்டோரத்தில் குப்பை சிதறிக்கிடப்பதால், சுகாதாரம் பாதிக்கிறது. நெகமம், கப்பினிபாளையத்தில் ரோட்டோரத்தில் குடியிருப்புகள் அருகே பழைய பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் இதர கழிவு கொட்டப்பட்டுள்ளது. இத்துடன் ரோட்டிலும் குப்பை சிதறி கிடக்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மழைக்காலத்தில் இப்பகுதியில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்டப்பட்டிருப்பதால் மேய்ச்சலுக்கு அழைத்து வரும் கால்நடைகள், குப்பையை உட்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் கால்நடைகளை இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து வருவதை விவசாயிகள் தவிர்க்கின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், ரோட்டோரம் கொட்டப்பட்ட குப்பையை அப்புறப்படுத்தி, குப்பைத்தொட்டி அமைத்து திடக்கழிவு மேலாண்மையை முறையாக கடைபிடிக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.