மேலும் செய்திகள்
வாகன விபத்தில் மூதாட்டி பலி
27-Sep-2026
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு –- வடசித்தூர் ரோட்டின் ஓரத்தில் அதிகளவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. கிணத்துக்கடவு -– வடசித்தூர் ரோட்டில் தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, வாகன போக்குவரத்தும் அதிகமாகியுள்ளது. இந்த வழித்தடத்தில் சமத்துவபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு மது மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வாங்கும் நபர்கள், அங்கேயே அருந்தி விட்டு ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை வீசி செல்கின்றனர். ரோட்டின் ஒரு பகுதியில் நீண்ட தூரத்துக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமே குவிந்து கிடக்கிறது. இது மட்டுமின்றி பிளாஸ்டிக் கவர்களும் காற்றுக்கு பறந்து வருவதால் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இங்கு கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்ற வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
27-Sep-2026