உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மூன்று பிராமண தம்பதியருக்கு சமஷ்டி சதா அபிஷேகம் 

 மூன்று பிராமண தம்பதியருக்கு சமஷ்டி சதா அபிஷேகம் 

கோவை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் டாடாபாத் கிளை சார்பில், 'சமஷ்டி சதா அபிஷேக விழா' நேற்று ராஜவீதி சங்கரமடத்தில் நடந்தது. ஏழ்மை நிலையிலிருக்கும், 80 வயதுடைய தம்பதியருக்கு, சதாபிஷேகம் நடத்த தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் முடிவு செய்தனர். கோவையில் மூன்று பிராமண தம்பதியரை தேர்வு செய்தனர். அவர்களுக்கு ராஜவீதி சங்கரமடத்தில் விமரிசையாக நேற்று சதாபிஷேகம் செய்தனர். விழா மேடையில் மூன்று தம்பதியருக்கும் புத்தாடை, அணிகலன்கள் வழங்கி அமரச்செய்தனர். ருத்ரஹோமம், ருத்ரஜெபம் நடத்தி ஹோமத்தில் வைத்திருந்த கலசத்திலிருந்த புனிதநீரால் அபிஷேகம் செய்தனர். அதன்பின் புத்தாடை அணியச்செய்து, புதிய வஸ்திரங்கள், குடை, தடி, காலணி, போர்வை, சீர்வரிசை பக் ஷணங்கள் என்று, 36 பொருட்கள் ஒவ்வொரு தம்பதியருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், தாம்பிராஸ் மாநில தலைவர் சி.ஜி.வி.கணேசன், மாவட்ட தலைவர் சங்கர், தாம்பிராஸ் டாடாபாத் கிளை தலைவர் கல்யாணகிருஷ்ணன், செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ